×

சிறுவனின் காயத்துக்கு தையல் போடாமல் பெவிகுவிக் போட்டு ஓட்டிய ஊழியர்கள்: தெலங்கானா மருத்துவமனையில் அலட்சியம்

திருமலை: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூரைச் சேர்ந்தவர்கள் வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர். இவர்களது 7 வயது மகன் பிரவீன் சவுத்ரி. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஆயிஜா என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வம்சிகிருஷ்ணா தனது மனைவி, மகனுடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் பிரவீன்சவுத்ரி விளையாடிக்கொண்டிருந்தபோது, கீழே விழுந்தான். அதில் இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது காயம் ஆழமாக இருந்த நிலையில் தையல் போடுவதற்கு பதில் மருத்துவமனை ஊழியர்கள் அதை பெவிகுவிக் கம் போட்டு ஒட்டி அனுப்பினர். இதை கவனித்த சிறுவனின் தந்தை வம்சிகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் நாகார்ஜுனாவிடம் சென்று விசாரித்தார். அதற்கு, ​​ஊழியர்கள் தவறு செய்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மருத்துவரிடம், வம்சி கிருஷ்ணா வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ` சிறுவன் பிரவீனுக்கு ஏதேனும் நடந்தால் நானே பொறுப்பு ஏற்கிறேன்’ என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

The post சிறுவனின் காயத்துக்கு தையல் போடாமல் பெவிகுவிக் போட்டு ஓட்டிய ஊழியர்கள்: தெலங்கானா மருத்துவமனையில் அலட்சியம் appeared first on Dinakaran.

Tags : Bevikuvic ,Telangana ,Thirumalai ,Vamsikrishna ,Sunita ,Karnataka State ,Raissur District Lingasukur ,Praveen ,Beviguick ,Hospital ,
× RELATED தெலங்கானா மருந்து கம்பெனியில்...